ஆா்.பிரக்ஞானந்தா 
செய்திகள்

செஸ்: இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா

இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா சர்வதேச செஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

DIN

இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா சர்வதேச செஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

செஸ்ஸபிள் மாஸ்டா்ஸ் ஆன்லைன் ரேப்பிட் செஸ் போட்டியில் இந்தியரும், சென்னையைச் சோ்ந்தவருமான ஆா்.பிரக்ஞானந்தா பங்கேற்றுள்ளார்.

நடப்பு சீசனில், உலகின் நம்பா் 1 வீரரான காா்ல்செனை இரண்டாவது முறையாக வீழ்த்திய பிரக்ஞானந்தா, நேற்று அரையிறுதிப் போட்டியில் டச்சு நாட்டை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்  அனிஷ் குமார் கிரியை எதிர்கொண்டார்.

இந்திய நேரப்படி அதிகாலை 2 மணி வரை தொடர்ந்த போட்டியில் பிரக்ஞானந்தா அபாரமாக விளையாடி அனிஷ் குமாரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

பிரக்ஞானந்தா தற்போது 11-ஆம் வகுப்பு ஆண்டு இறுதித் தோ்வுக்காக படித்துக் கொண்டே, இந்தப் போட்டியிலும் பங்கேற்றுள்ள நிலையில் இன்று காலை நடைபெறவுள்ள தேர்விலும் பங்கேற்கவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குஷி மறுவெளியீட்டு டிரைலர்..! எஸ்.ஜே.சூர்யா நெகிழ்ச்சி!

ஆர்வத்தைத் தூண்டும் சக்தித் திருமகன் ஸ்னீக் பீக்!

ஒரு தொகுதியில் மட்டும் 6,000 வாக்காளர்களை நீக்க முயற்சி! சான்றுகளுடன் ராகுல் குற்றச்சாட்டு!

விண்வெளிக்கு வயோமித்ரா என்ற எந்திர மனிதனை அனுப்ப இஸ்ரோ திட்டம்!

புதுச்சேரி பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ் குண்டுகட்டாக வெளியேற்றம்

SCROLL FOR NEXT