ஜகார்த்தா: ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் நடப்புச் சாம்பியனான இந்தியா, குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தோனேசியாவை புதன்கிழமை சந்திக்கிறது.
முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் டிரா செய்து, 2-ஆவது ஆட்டத்தில் ஜப்பானிடம் தோற்ற இந்தியா, குரூப் சுற்றில் தற்போது ஜப்பான், பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக 3-ஆவது இடத்தில் இருக்கிறது. இதனால் இயல்பாகவே நாக் அவுட் சுற்றுக்குத் தகுதிபெறும் வாய்ப்பை இந்தியா இழந்திருக்கிறது.
தற்போதைய நிலையில் இந்தோனேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அதிக கோல்கள் வித்தியாசத்தில் இந்தியா வெல்ல வேண்டும். அத்துடன், ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் தோற்க வேண்டும். இவை இரண்டும் நிகழ்ந்தால் மட்டுமே இந்தியாவுக்கான நாக் அவுட் சுற்று வாய்ப்பு கிடைக்கும்.
இதர ஆட்டங்களில் ஓமன் - தென் கொரியா, மலேசியா - வங்கதேசம் அணிகளும் விளையாடுகின்றன.