செய்திகள்

சூர்யகுமார் யாதவைப் பாராட்டும் பாகிஸ்தான் அணியின் ஆலோசகர்!

DIN

டி20 கிரிக்கெட்டுக்குத் தேவையான புதுமையான ஷாட்களை சூர்யகுமார் யாதவ் கொண்டுள்ளார் என பாகிஸ்தான் அணியின் ஆலோசகர் மேத்யூ ஹேடன் கூறியுள்ளார்.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் குரூப் 2 பிரிவில் முதல் இடம் பிடித்து அரையிறுதிக்குத் தகுதியடைந்துள்ளது இந்திய அணி. அரையிறுதிக்கு இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் தகுதி பெற்றுள்ளன. புதன் அன்று சிட்னியில் நடைபெறும் முதல் அரையிறுதியில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. வியாழன் அன்று அடிலெய்டில் நடைபெறவுள்ள 2-வது அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் ஆலோசகரும் ஆஸி. முன்னாள் வீரருமான மேத்யூ ஹேடன் கூறியதாவது:

டி20 கிரிக்கெட்டில் ஒரு வீரரின் பலம் மட்டுமே அதிக ரன்கள் எடுக்கக் காரணமாக அமையாது. நடு ஓவர்களில் விளையாடும் இந்தியாவின் சூர்யகுமார் யாதவைப் போன்ற வீரர்கள் டி20 கிரிக்கெட்டுக்குத் தேவையான புதுமையான ஷாட்களைக் கொண்டுள்ளார்கள். இவரைப் போன்ற வீரர்கள் எதிரணிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளார்கள். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நூலிழையில் சில ஆட்டங்களை அணிகள் வென்றுள்ளன. விக்கெட்டுகளைப் பாதுகாத்து தேவையான நேரத்தில் புதுமையான ஷாட்களை விளையாட வேண்டும். இதனால் தான் இந்த 4 அணிகளும் தொடர்ந்து போட்டியில் விளையாடுகின்றன. ஆஸ்திரேலிய அணியால் புதிய பந்தைச் சரியாக எதிர்கொள்ள முடியவில்லை. அதனால் ஏற்பட்ட சரிவால் தோல்வியடைந்துள்ளது என்று கூறியுள்ளார். 

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சூப்பர் 12 சுற்றில் அதிக ரன்களை எடுத்த வீரர்களின் பட்டியலில் 225 ரன்களுடன் 2-ம் இடம் பிடித்துள்ளார் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் தடையை சரி செய்யக் கோரி தகராறு: ரெளடி கைது

நா்சிங் படிப்புக்கு நுழைவுத் தோ்வு: ரத்து செய்ய எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள்தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு

மழை வேண்டி கூட்டு தவம்

குமரி அருகே கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்

SCROLL FOR NEXT