செய்திகள்

இங்கிலாந்தைக் காப்பாற்றிய மலான் சதம்: ஆஸி.க்கு அணிக்கு 288 ரன்கள் இலக்கு!

முதல் ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்தது. 

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்தது. 

டி20 உலகக் கோப்பைப் போட்டியை வென்ற இங்கிலாந்து அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. அடிலெய்டில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. மொயீன் அலி, அடில் ரஷித், கிறிஸ் வோக்ஸ், சாம் கரண் இங்கிலாந்து அணியில் இடம்பெறவில்லை. லூக் வுட் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார். டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் இங்கிலாந்து அணியில் விளையாடிய பட்லர், சால்ட், ஜோர்டன் ஆகியோர் மட்டும் இந்த ஆட்டத்தில் விளையாடுகிறார்கள். 

யாரும் எதிர்பாராதவகையில் இங்கிலாந்து 14-வது ஓவரின்போது 4 விக்கெட் இழப்புக்கு 66 என்கிற நிலைமையில் இருந்தது. இதன்பிறகு ஜோடி சேர்ந்த பட்லரும் டேவிட் மலானும் சரிவைத் தடுத்து நிறுத்தினார்கள். மலானுடன் 50 ரன்கள் கூட்டணி அமைத்து 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் பட்லர். மலான் 64 பந்துகளில் அரை சதமெடுத்தார். 37-வது ஓவரின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 199 என்கிற நிலைமையை அடைந்தது இங்கிலாந்து. எனினும் மற்றொரு முனையில் பொறுப்பாக ஆடிய மலான், 107 பந்துகளில் சதமெடுத்தார். கடைசியில் அணிக்கு நல்ல ஸ்கோரை வழங்கிவிட்டு 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் மலான். 

இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்தது. டேவிட் வில்லி ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் எடுத்தார். கம்மின்ஸ், ஸாம்பா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளி வீட்டில் 28 பவுன் நகை, ரூ.50,000 திருட்டு

தற்காலிக நீதிபதிகள் நியமனம்: 9 மாதங்களாக பரிந்துரைகளை அனுப்பாத உயா்நீதிமன்றங்கள்!

பள்ளி மாணவா்களுக்கு குடை

கடையின் பூட்டை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருட்டு

மன்னாா்குடியில் புதிய பேருந்து நிலையம் திறப்பு

SCROLL FOR NEXT