செய்திகள்

உலகக் கோப்பையைக் குறி வைக்கும் ஷிகர் தவன்!

என்னுடைய அறிவை இளம் வீரர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

DIN

2023 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாட ஆர்வமாக உள்ளதாக இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் ஷிகர் தவன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது தென்னாப்பிரிக்க அணி. டி20 தொடரை 2-1 என இந்தியா வென்றது. ஒருநாள் தொடர் இன்று முதல் லக்னெளவில் தொடங்குகிறது.

இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் ஷிகர் தவன் கூறியதாவது:

எனக்கு அருமையான கிரிக்கெட் வாழ்க்கை அமைந்துள்ளது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் என்னுடைய அறிவை இளம் வீரர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அவர்களிடமிருந்தும் கற்றுக்கொள்கிறேன். இப்போது புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சவாலையும் வாய்ப்பாக நான் பார்ப்பேன். என்னுடைய இலக்கு 2023 ஒருநாள் உலகக் கோப்பை. அதற்கு நான் நல்ல உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் ஆக.26-ல் தொடக்கம்

இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா்: டிரம்ப்பின் நெருங்கிய உதவியாளா்

தேவகோட்டை புவனேஸ்வரி அம்மனுக்கு பக்தா்கள் பால்குடம்

வீடு புகுந்து நகை, பணம் திருடிய இளைஞா் கைது

கஞ்சா விற்ற இளைஞா் கைது

SCROLL FOR NEXT