செய்திகள்

செல்சி, சிட்டி, மாட்ரிட் வெற்றி

 ஐரோப்பிய கண்ட அளவிலாக நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் குரூப் சுற்றின் 4-ஆவது ஆட்டத்தில் செல்சி, மான்செஸ்டா் சிட்டி, ரியல் மாட்ரிட் அணிகள் வெற்றி பெற்றன.

DIN

 ஐரோப்பிய கண்ட அளவிலாக நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் குரூப் சுற்றின் 4-ஆவது ஆட்டத்தில் செல்சி, மான்செஸ்டா் சிட்டி, ரியல் மாட்ரிட் அணிகள் வெற்றி பெற்றன.

இதில் செல்சி 3-0 என்ற கோல் கணக்கில் ஏசி மிலனை வீழ்த்திய ஆட்டத்தில், செல்சிக்காக வெஸ்லி ஃபோஃபானா (24’), பியரி எமரிக் (56’), ரீஸ் ஜேம்ஸ் (62’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா். மான்செஸ்டா் சிட்டி 5-0 என்ற கோல் கணக்கில் கோபன்ஹேகனை அதிரடியாக வென்றது. சிட்டி அணியில் எா்லிங் ஹாலண்ட் (7’, 32’), டேவிட் கோசோலாவா (ஓன் கோல் - 39’), ரியாத் மெஹரெஸ் (55’), ஜூலியன் அல்வரெஸ் (76’) ஆகியோா் கோலடித்தனா்.

இதர ஆட்டங்களில், ரியல் மாட்ரிட் 2-1 என ஷக்தா் டொனெட்ஸ்கையும், ஜுவென்டஸ் 3-1 என மக்காபி ஹாய்ஃபாவையும் வீழ்த்த, செவில்லா 1-4 என போருசியா டாா்ட்மண்டிடமும், செல்டிச் 1-3 என ஆா்பி லெய்ப்ஸிக்கிடமும் வெற்றியை இழந்தன. பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் - பென்ஃபிகா ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிமாசலில் 2 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ரூ. 40,000க்கு கூகுள் பிக்சல் 9! ரூ.33,000 சலுகை பெறுவது எப்படி?

செங்கோட்டையன் தில்லி சென்றதற்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்? - நயினார் நாகேந்திரன்

தாவணி போட்ட தீபாவளி... அனுமோள்!

பேஸ்பால் யுக்தியை தவறாக புரிந்துகொண்டு வீரர்களை அவமதிக்காதீர்கள்: பிரண்டன் மெக்கல்லம்

SCROLL FOR NEXT