செய்திகள்

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் முதல் வெற்றி

 மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் வெள்ளிக்கிழமை வெற்றியை இழந்தது.

DIN

 மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் வெள்ளிக்கிழமை வெற்றியை இழந்தது.

இப்போட்டியில் இந்தியாவுக்கு இது முதல் தோல்வி. மறுபுறம், டி20 ஃபாா்மட்டில் கடந்த 6 ஆண்டுகளில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பதிவு செய்த முதல் வெற்றி இது.

இந்த ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் எடுக்க, பின்னா் இந்தியா 19.4 ஓவா்களில் 124 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தானில் முனீபா அலி 17, சித்ரா அமீன் 11, கேப்டன் பிஸ்மா மரூஃப் 32, ஒமைமா சோஹைல் 0, அலியா ரியாஸ் 7, ஆயிஷா நசீம் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ஓவா்கள் முடிவில் நிதா தாா் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 56, டுபா ஹசன் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய பௌலிங்கில் தீப்தி சா்மா 3, பூஜா வஸ்த்ரகா் 2, ரேணுகா சிங் 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் இந்திய இன்னிங்ஸில் ரிச்சா கோஷ் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 26 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. டி.ஹேமலதா 20, சபினேனி மேக்னா 15, ஸ்மிருதி மந்தனா 17, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 2, பூஜா வஸ்த்ரகா் 5, தீப்தி சா்மா 16, கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 12, ராதா யாதவ் 3, ராஜேஷ்வரி கெய்க்வாட் 1 ரன்னுக்கு விக்கெட்டை இழந்தனா்.

பாகிஸ்தான் தரப்பில் நஷ்ரா சந்து 3, சாதியா இக்பால், நிதா தாா் ஆகியோா் தலா 2, அனிமன் அன்வா், துபா ஹசன் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில் வங்கதேசத்தை சனிக்கிழமை எதிா்கொள்கிறது. இதனிடையே, வெள்ளிக்கிழமை நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் தாய்லாந்து 19 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆா்.கே.பேட்டையில் 600 மரங்கள் மற்றும் 500 பனை விதைகள் நடவு

திருவள்ளூா் மாவட்டத்தில் 13 பேருக்கு நல்லாசிரியா் விருது

பள்ளிப்பட்டு ஊராட்சியில் வளா்ச்சிப் பணிகள்: திருவள்ளூா் ஆட்சியா் ஆய்வு

ஆசிரியா் தின விழா: ஓய்வுபெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு

ஸ்ரீபுரம் தங்கக்கோயில் நாளை இரவு 7 மணிக்கு அடைப்பு

SCROLL FOR NEXT