செய்திகள்

கெளதம் கம்பீருக்குப் பதவி உயர்வு அளித்த சூப்பர் ஜெயண்ட்ஸ் நிர்வாகம்!

DIN

டி20 லீக் போட்டிகளில் விளையாடும் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளின் ஆலோசகராக முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 2022 போட்டியில் 4-ம் இடத்தைப் பிடித்தது கே.எல். ராகுல் தலைமையிலான லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. ஐபிஎல் போட்டியில் இந்தாண்டு அறிமுகமான லக்னௌ அணியை, கொல்கத்தாவைச் சோ்ந்த தொழிலதிபரான சஞ்சீவ் கோயங்காவின் ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ரூ. 7,090 கோடிக்கு வாங்கியது. ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ஏற்கெனவே கடந்த 2016-17 காலகட்டத்தில் ரைசிங் புணே சூப்பா் ஜெயன்ட் அணி உரிமையாளராக இருந்தது.

அடுத்தாண்டு ஜனவரி முதல் தென்னாப்பிரிக்காவில் தொடங்கவுள்ள எஸ்ஏ20 போட்டியில் டர்பன் அணியையும் ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் விலைக்கு வாங்கியுள்ளது. அந்த அணி டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் என அழைக்கப்படுகிறது. 

லக்னெள அணியின் ஆலோசகராக செயல்படும் கெளதம் கம்பீர், தற்போது டர்பணி அணி உள்பட அனைத்து  சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளின் ஆலோசகராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். டர்பன் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் லான்ஸ் க்ளூஸ்னர் நியமிக்கப்பட்டுள்ளார். 

2019-ல் கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்றார் கெளதம் கம்பீர். 

இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்த கெளதம் கம்பீர் அனைத்து வகையான கிரிக்கெட் ஆட்டங்களில் இருந்தும் 2018 டிசம்பர் மாதம் ஓய்வுபெற்றார். இந்தியாவின் தலைசிறந்த தொடக்க வீரர்களில் ஒருவராக திகழ்ந்த கம்பீர் கடந்த 2004 முதல் 2016-ஆம் ஆண்டு வரை இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றிருந்தார். 9 சதம், 22 அரை சதத்துடன் 4199 ரன்களையும், ஒருநாள் ஆட்டங்களில் 2003 முதல் 2013 வரை ஆடி 11 சதம், 34 அரை சதங்களுடன் மொத்தம் 5238 ரன்களை குவித்தார். குறிப்பாக 2011 ஒரு நாள் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக 97 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார். ஐபிஎல் அணிகளில் கொல்கத்தா, தில்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாகவும் விளையாடியுள்ளார் கம்பீர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT