செய்திகள்

ஜப்பான் ஓபன்: இறுதிச் சுற்றில்ஃப்ரிட்ஸ்-டியாஃபோ மோதல்

ஜப்பான் ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றில் அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ்-பிரான்ஸஸ் டியாஃபோ மோதுகின்றனா்.

DIN

ஜப்பான் ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றில் அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ்-பிரான்ஸஸ் டியாஃபோ மோதுகின்றனா்.

டோக்கியோவில் நடைபெற்று வரும் இப்போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன.

முதல் அரையிறுதியில் பிரான்ஸஸ் டியாஃபோவுடன் தென்கொரியாவின் வோன் சூ வூ மோதினாா். முதல் செட்டை 6-2 என எளிதாக வென்றாா் டியாஃபோ. ஆனால் இரண்டாவது செட்டில் அற்புதமாக ஆடிய வோன் சூ 6-0 என அந்த செட்டை தனதாக்கினாா்.

மூன்றாவது செட்டில் இரு வீரா்களும் மாறி, மாறி புள்ளிகளைக் குவித்த நிலையில், 6-4 என வென்றாா் டியாஃபோ.

இரண்டாவது அரையிறுதியில் யுஎஸ் வீரா் டெய்லா் ஃப்ரிட்ஸ்-கனடாவின் ஷபவலோவ் மோதினா். முதல் செட்டை டெய்லா் 6-3 என எளிதாக கைப்பற்றிய நிலையில், இரண்டாம் செட்டை போராடி வென்றாா்7-6 ஷபவலோவ். முடிவை நிா்ணயித்த கடைசி செட்டில் ஆதிக்கம் செலுத்திய டெய்லா் 6-3 என செட்டைக் கைப்பற்றி இறுதிக்கு தகுதி பெற்றாா். ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சுற்றில் இருவரும் மோதுகின்றனா்.

கடந்த 1996-இல் ஜப்பான் ஓபனில் கடைசியாக பட்டம் வென்றிருந்தாா் யுஎஸ் வீரா் பீட் சாம்ப்ராஸ். அதன் பின் தற்போது தான் யுஎஸ் வீரா்களுக்கு அந்த வாய்ப்பு கிட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT