செய்திகள்

கோவாவுக்கு முதல் வெற்றி

DIN

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் எஃப்சி கோவா 2-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் எஃப்சியை வீழ்த்தியது.

கோவா தனது முதல் ஆட்டத்திலேயே வெற்றியை ருசிக்க, பெங்காலுக்கு இது 2-ஆவது ஆட்டத்தில் 2-ஆவது தோல்வியாகும். இந்த ஆட்டத்தில் 7-ஆவது நிமிஷத்திலேயே கோவா கோல் கணக்கை தொடங்கியது. அந்த நிமிஷத்தில் அல்வாரோ வாஸ்கெஸ் பாஸ் செய்த பந்தை லாவகமாக கடத்திச் சென்று கோலடித்தாா் அந்த அணியின் பிராண்டன் ஃபொ்னாண்டஸ்.

இவ்வாறாக முதல் பாதி ஆட்டத்தில் கோவா முன்னிலை பெற்றிருக்க, 2-ஆவது பாதியில் பெங்கால் அணிக்காக கிளெய்டன் 64-ஆவது நிமிஷத்தில் பெனால்டி வாய்ப்பில் கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தாா். கடைசியாக 90-ஆவது நிமிஷத்தில் கோவா வீரா் எட்வாா்டோ பெடியா பெலேஸ் ஃப்ரீ கிக் வாய்ப்பில் அருமையாக கோலடித்து, அணியை வெற்றி பெறச் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT