செய்திகள்

கார்ல்சனை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் சாதனை!

குகேஷுக்கு முன்பு கார்ல்சனை வீழ்த்திய இளம் வீரர் என்கிற சாதனை பிரக்ஞானந்தா வசம் இருந்தது. 

DIN

எயிம்செஸ் ரேபிட் போட்டியில் கார்ல்சனை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ்.

எயிம்செஸ் ரேபிட் போட்டியில் கார்ல்சனை 29 நகர்த்தலில் வீழ்த்தினார் குகேஷ். 16 வருடங்கள் 4 மாதங்கள் 29 நாள்கள் வயது கொண்ட குகேஷ், உலக சாம்பியனாக உள்ள கார்ல்சனை வீழ்த்திய இளம் வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முந்தைய ஆட்டத்தில் மற்றொரு இந்திய வீரரான அர்ஜுன் எரிகைசி, கார்ல்சனை வீழ்த்தினார். சமீபகாலமாக பிரக்ஞானந்தா, அர்ஜுன், குகேஷ் என மூன்று இளம் இந்திய வீரர்கள் கார்ல்சனை வீழ்த்தி அசத்தியுள்ளார்கள். குகேஷுக்கு முன்பு கார்ல்சனை வீழ்த்திய இளம் வீரர் என்கிற சாதனை பிரக்ஞானந்தா வசம் இருந்தது. 

எயிம்செஸ் ரேபிட் போட்டியில் கார்ல்சன், குகேஷ், அர்ஜுன் ஆகிய மூவரும் 21 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் உள்ளார்கள். 25 புள்ளிகளுடன் டுடா முதலிடத்தில் உள்ளார். 

கார்ல்சனை வீழ்த்தினாலும் தன்னுடைய ஆட்டத்தில் குகேஷ் திருப்தியடையவில்லை. அவர் கூறியதாவது: கார்ல்சனை வீழ்த்தியது சிறப்பான தருணம் தான். ஆனாலும் என்னுடைய ஆட்டத்தில் எனக்குத் திருப்தியில்லை என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ப்ரியமான தோழி... ஷபானா - ஜனனி!

அரசனில் சிம்புவின் தோற்றம் இதுதான்!

சென்னை ஒன் செயலியில் மாதாந்திர பயண அட்டை பெறும் வசதி!

பிகாரில் பாஜக சார்பில் போட்டியிடும் பிரபல பாடகி?! மோடியால் பாராட்டப்பட்டவர்!

குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கப் போகிறீர்களா? எச்சரிக்கை!

SCROLL FOR NEXT