கம்மின்ஸ் (வலது) 
செய்திகள்

ஆஸி. ஒருநாள் அணிக்குப் புதிய கேப்டன் அறிவிப்பு!

2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்பு 14 ஒருநாள், 15 டெஸ்டுகளில் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது.

DIN

ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய டி20, ஒருநாள் அணிகளின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் கடந்த மாதம் அறிவித்தார். 35 வயது ஃபிஞ்ச், ஆஸி. அணிக்காக 2011 முதல் 5 டெஸ்டுகள், 146 ஒருநாள், 100 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஆஸ்திரேலிய டி20 அணியின் கேப்டனாக உள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன் என்று அவர் அறிவித்தார். கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸி. அணி சாம்பியன் பட்டம் வென்றது. 

இதையடுத்து ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் கேப்டனாகவும் கம்மின்ஸ் உள்ளதால் 2023 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு ஆஸ்திரேலியா விளையாடும் அனைத்து ஒருநாள் ஆட்டங்களிலும் கம்மின்ஸ் விளையாடுவது சாத்தியமில்லை. 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்பு 14 ஒருநாள், 15 டெஸ்டுகளில் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது. இதனால் கம்மின்ஸுக்கு உதவுவதற்காக தலைமைப்பண்பு கொண்ட ஒரு குழுவை அமைக்கவுள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. துணை கேப்டனாக ஒருவரை நியமிப்பதற்குப் பதிலாக கம்மின்ஸ் விளையாடாத ஒருநாள் ஆட்டங்களில் ஆஸி. அணிக்குத் தலைமை தாங்க சில வீரர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்படவுள்ளது. அவர்களில் ஒருவர் கம்மின்ஸ் விளையாடாத ஒருநாள் ஆட்டங்களில் கேப்டனாகச் செயல்படுவார். இந்தக் குழுவில் டேவிட் வார்னரும் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தில் ராணுவ ஆட்சி!

நேபாளத்தில் அமைதி திரும்பியதா?

தனியார் மருத்துவமனைகளில் கூட்டு மருத்துவ சிகிச்சை! தொடக்கி வைத்தார் மா. சுப்பிரமணியன்

3-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! வங்கி, ஐடி பங்குகள் உயர்வு!

விஜய் ஆண்டனி - சசி படத்தின் பெயர்!

SCROLL FOR NEXT