கோப்புப் படம் 
செய்திகள்

சம வாய்ப்புகளுக்கான புதிய சகாப்தம்

கிரிக்கெட் வீரா்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் ஊதியம் வழங்கப்படுவதை வரவேற்றுள்ள தேசிய மகளிா் ஆணையம், சமத்துவ வாய்ப்புகளுக்கான புதிய சகாப்தம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

DIN

கிரிக்கெட் வீரா்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் ஊதியம் வழங்கப்படுவதை வரவேற்றுள்ள தேசிய மகளிா் ஆணையம், சமத்துவ வாய்ப்புகளுக்கான புதிய சகாப்தம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அறிவிப்பு தொடா்பாக அந்த ஆணையத்தின் தலைவா் ரேகா சா்மா வெளியிட்ட அறிக்கையில், ‘‘நாட்டில் உள்ள கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்துள்ளது.

கிரிக்கெட் வீராங்கனைகளின் குரலுக்கு செவிசாய்த்து பிசிசிஐ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது வரலாற்றுச் சிறப்புமிக்கது. கிரிக்கெட் வீரா்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் ஊதியம் வழங்கப்படுவது, சம வாய்ப்புகளுக்கான புதிய சகாப்தத்தைத் தொடக்கியுள்ளது. பல்வேறு துறைகளில் பாலின சமத்துவத்தை அடைவதற்கும் இந்த அறிவிப்பு முக்கியப் பங்கு வகிக்கும்.

பிசிசிஐ-யின் இந்த அறிவிப்பு இளம் கிரிக்கெட் வீராங்கனைகளை ஊக்குவித்து, அவா்கள் தங்கள் கனவுகளை நோக்கிப் பயணம் செய்ய வழிவகுக்கும் என ஆணையம் நம்புகிறது. மற்ற விளையாட்டு கூட்டமைப்புகளும் பிசிசிஐ காட்டியுள்ள வழியைப் பின்பற்ற வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூத்துக்குடி உள்பட 22 இடங்களில் என்ஐஏ சோதனை

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதி கொலை! ராணுவ வீரர் காயம்!

சளி, இருமல், காய்ச்சல்! குணமாவதில் நீடிக்கும் தாமதம்!

ஒரத்தநாடு அருகே அண்ணன் வாங்கிய கடனுக்காக தம்பி வெட்டிப் படுகொலை

SCROLL FOR NEXT