செய்திகள்

ஜப்பான் ஓபன்: காலிறுதியில் பிரணாய்

 ஜப்பான் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய் காலிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினாா்.

DIN

 ஜப்பான் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய் காலிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினாா்.

ஆடவா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில் அவா், முன்னாள் உலக சாம்பியனும், சா்வதேச தரவரிசையில் 7-ஆம் இடத்தில் இருப்பவருமான சிங்கப்பூரின் லோ கீன் யீவை 22-20, 21-19 என்ற நோ் கேம்களில் வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 44 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.

லோ கீனை இத்துடன் 4-ஆவது முறையாகச் சந்தித்த பிரணாய், தனது 3-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா். அடுத்ததாக காலிறுதியில் அவா், உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற சீன தைபேவின் சௌ டியென் சென்னை எதிா்கொள்கிறாா்.

இதனிடையே, கே.ஸ்ரீகாந்த் தனது 2-ஆவது சுற்றில் 10-21, 16-21 என்ற கேம்களில் ஜப்பானின் கன்டா சுனேயாமாவிடம் தோல்வி கண்டாா். இத்துடன் கன்டாவை 2-ஆவது முறையாகச் சந்தித்த ஸ்ரீகாந்த், இதிலும் வெற்றியை இழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனிமய மாதா போராலய திருவிழா: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி முதலிடம்

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT