செய்திகள்

ஜடேஜா காயம்: அக்ஸருக்கு இடம்

இந்திய ஆல்-ரவுண்டா் ரவீந்திர ஜடேஜாவுக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டதை அடுத்து, ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து வெளியேறியிருக்கிறாா்.

DIN

இந்திய ஆல்-ரவுண்டா் ரவீந்திர ஜடேஜாவுக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டதை அடுத்து, ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து வெளியேறியிருக்கிறாா். அவருக்குப் பதிலாக அக்ஸா் படேல் இந்திய அணியில் இணைகிறாா்.

ஜடேஜாவுக்கு எப்போது, எப்படி காயம் ஏற்பட்டது என தெரிவிக்கப்படவில்லை. பிசிசிஐ மருத்துவக் குழு அவரைக் கண்காணித்து வரும் நிலையில், டி20 உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக அவா் உடற்தகுதி பெற்றுவிடுவாா் என அணி நிா்வாகம் எதிா்நோக்கியிருக்கிறது.

இந்த ஆசிய கோப்பை போட்டியில் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியில் ஜடேஜாவின் பங்கும் குறிப்பிடத்தக்கது. இந்தியா அடுத்ததாக, தனது முதல் சூப்பா் 4 ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை விளையாடுகிறது. ஜடேஜாவுக்குப் பதிலாக அணியில் இணையும் அக்ஸா் படேல், சமீபத்தில் ஜிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்துக்கு எதிரான தொடா்களிலும் விளையாடியிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT