கல்யாண் செளபே 
செய்திகள்

இந்திய கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக கல்யாண் செளபே தேர்வு

அனைத்திந்திய கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக கல்யாண் செளபே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

DIN

அனைத்திந்திய கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக கல்யாண் செளபே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

அனைத்திந்திய கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பொறுப்பிற்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. மொத்தம் 34 வாக்குகள் கொண்ட இந்த தேர்தலில் 33-1 என்ற வாக்குகளின் முடிவில் முன்னாள் கோல் கீப்பரான கல்யாண் செளபே வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாய்சிங் பூட்டியா தோல்வியடைந்தார். 

கல்யாண் செளபே கடந்த மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவராவார். கிழக்கு வங்கம் மற்றும் மெளன் பாகன் அணியின் கோல்கீப்பராக கல்யாண் செளபே விளையாடியுள்ளார். 

கல்யாண் செளபேவும், பாய்சிங் பூட்டியாவும் கிழக்கு வங்கம் அணிக்காக இணைந்து விளையாடியுள்ளனர். 

அதேபோல் கர்நாடக கால்பந்து கழகத்தின் தலைவரும், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருமான என்.ஏ.ஹரிஸ் அனைத்திந்திய கால்பந்து சம்மேளனத்தின் துணைத் தலைவர் பொறுப்புக்கும், அருணாச்சலப் பிரதேசத்தின் கிபா அஜய் பொருளாளர் பொறுப்பிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

மேலும் செயற்குழுவிற்கு முன்மொழியப்பட்ட 14 உறுப்பினர்களும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

முன்னதாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி கால்பந்து சம்மேளனத்தை நிர்வகிக்க அமைக்கப்பட்ட புதிய குழுவைத் தொடர்ந்து இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கான தடையை பிஃபா நீக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

SCROLL FOR NEXT