ஜானி பேர்ஸ்டோ 
செய்திகள்

டி20 உலக கோப்பை: காயத்தால் விலகிய இங்கிலாந்து வீரர்!

பிரபல இங்கிலாந்து பேட்டர் ஜானி பேர்ஸ்டோ காயம் காரணமாக டி20 உலக கோப்பை போட்டிகளிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

DIN

பிரபல இங்கிலாந்து பேட்டர் ஜானி பேர்ஸ்டோ காயம் காரணமாக டி20 உலக கோப்பை போட்டிகளிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

சமீபத்தில்தான் ஐசிசி டி20 உலக கோப்பைக்கான இங்கிலாந்து வீர்ரகளை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (ஈசிபி) அறிவித்தது. இதில் ஜானி பேர்ஸ்டோ இடம் பெற்றிருந்தார்.

உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணி

ஜாஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோ, ஹாரி புரூக், சாம் கரண், கிறிஸ் ஜார்டன், லியம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், அடில் ரஷித், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

மாற்று வீரர்கள்: லியம் டாசன், ரிச்சர்ட் கிளீசன், டைமல் மில்ஸ்.

தற்போது,  வெள்ளிகிழமையன்று கோல்ப் விளையாடும் போது ஜானி பேர்ஸ்டோவுக்கு ஏற்பட்ட தசைப்பிடிப்பினால்  டி20 உலக கோப்பை போட்டிகளிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.  

ஜானி பேர்ஸ்டோவுக்கு பதிலாக மாற்று வீரரை விரைவில் அறிவிப்போம் என ஈசிபி தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT