செய்திகள்

இந்தியாவிடம் இருந்து கை நழுவுகிறதா ஆசியக் கோப்பை, இலங்கை அணி த்ரில் வெற்றி

DIN

ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இன்று (செப்டம்பர் 6) மோதின. இந்தப் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து, 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்கியது. 

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசங்கா மற்றும் குஷால் மெண்டிஸ் களமிறங்கினார். இந்த இணை ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. இவர்களின் பார்ட்னர்ஷிப்பை இந்திய அணியின் பந்து வீச்சாளர்களால் எளிதில் உடைக்க முடியவில்லை. 

சிறப்பாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இலங்கை அணி 97 ரன்களுக்கு தனது முதல் விக்கெட்டை இழந்தது. பதும் நிசங்கா 52 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதன்பின் களமிறங்கிய அசலங்கா 0 ரன்னிலும், குணத்திலகா 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான குஷால் மெண்டிஸ் 57 ரன்கள் சேர்த்து சஹால் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து, பனுகா ராஜபட்ச மற்றும் கேப்டன் தாசுன் ஷானகா ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி அணியினை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. 

கடைசி இரண்டு ஓவர்களில் 20 ரன்களுக்கும் மேலாக தேவைப்பட புவனேஷ்வர் குமார் 19வது ஓவரை வீசினார். அவரது ஓவரில் இலங்கை அணி 2 பவுண்டரிகள் உட்பட 14 ரன்கள் குவித்தது. இதனால், அந்த அணிக்கு கடைசி ஓவரில் 6 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்டன. அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரை வீசினார். அவர் சிறப்பாக பந்து வீசிய போதிலும் இலங்கை அணியின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை.

ஆட்டத்தின் இறுதியில் ஒரு பந்து மீதமிருக்க இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 

சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்த இந்திய அணி இன்று தனது இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் இந்திய அணியின் ஆசியக் கோப்பைக்கான வாய்ப்பு குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT