செய்திகள்

துலீப் கோப்பை: 193 ரன்கள் எடுத்த இளம் வீரர்

தனது முதல் துலீப் கோப்பை ஆட்டத்தில் சதமடித்து அசத்தியுள்ளார். 

DIN

புதுச்சேரியில் நடைபெறும் துலீப் கோப்பைப் போட்டியில் இளம் வீரர் யாஷ் துல் 193 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்.

கிழக்கு -  வடக்கு மண்டலங்கள் மோதும் இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கிழக்கு மண்டலம், 397 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. விராத் சிங் 117 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு விளையாடி வரும் வடக்கு மண்டலம் 100 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 388 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. 19 வயது யாஷ் துல் 193 ரன்கள் எடுத்து அசத்தினார். 

இந்த வருடம் யு-19 உலகக் கோப்பைப் போட்டியை இந்திய அணி வென்றபோது கேப்டனாக இருந்தார் யாஷ் துல். ரஞ்சி கோப்பைப் போட்டியின் அறிமுக ஆட்டத்தில் இரு சதங்கள் எடுத்தார். மேலும் ரஞ்சி கோப்பைப் போட்டியில் இரட்டைச் சதமும் எடுத்தார். தற்போது தனது முதல் துலீப் கோப்பை ஆட்டத்தில் சதமடித்து அசத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

முதலமைச்சா் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி தொடக்கம்

கடகத்துக்கு யோகம்.. தினப்பலன்கள்!

சத்தீஸ்கா் மழை வெள்ளம்: திருப்பத்தூரைச் சோ்ந்த ஒரே குடும்பத்தினா் 4 போ் உயிரிழப்பு

வேன் மோதி இளைஞா் மரணம்

SCROLL FOR NEXT