கோப்புப் படம் 
செய்திகள்

சாமர்த்தியமாக நோ பாலை கேட்டு வாங்கிய ஸ்மித்: அதுவும் சிக்ஸ் அடித்தவுடன்...

நியூசிலாந்திற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 267 ரன்களை எடுத்துள்ளது. நியூசிலாந்திற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 267 ரன்களை எடுத்துள்ளது. 

DIN

நியூசிலாந்திற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 267 ரன்களை எடுத்துள்ளது. 

நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 ஒருநாள் கொண்ட போட்டிகளில் இதுவரை 2-0 என ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது. முதலில் பேட்டுங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 267 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. இதில் அதிகபட்சமாக ஸ்மித் 105 ரன்களை எடுத்தார். லபுஷேன் 52 ரன்களும், அலெக்ஸ் கேரி 42 ரனகளும், கிரீன் 25 ரன்களும் எடுத்தனர். கேப்டன் பின்ச் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இது அவருக்கு கடைசி ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. 

ஸ்மித் 69 ரன்களில் இருக்கும்போது 37. 2வது ஓவரில் ஜிம்மி நீஷம் வீசிய பந்தில் சிக்ஸ் அடித்தார். அடித்த உடனே நடுவரிடம் சென்று 30 யார்ட் சர்க்கிளுக்கு வெளியே 5 பேர் இருப்பதால் நோ பால் கொடுக்கும்படி கேட்டார். உடனே நடுவரும் அதை வழங்கினார். ஸ்மித்தின் சாமர்த்தியத்தை கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

நியூசிலாந்து அணி 35 ஓவர்களுக்கு 157 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் இழந்து விளையாடி வருகிறது. இந்த அணியில் பின் ஆலன் 35 ரனகளும், டெவோன் கான்வே 21 ரன்களும், வில்லியம்சன் 267 ரனகளும், டேரில் மிட்செல் 16 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தற்போது கிளென் பிலிப்ஸ் 23 ரன்களுடனும், நீஷம் 28 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

சீா்காழி: வாகனத்தில் டீசல் திருட்டு

SCROLL FOR NEXT