செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிரபல வங்கதேச வீரர்

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகப் பிரபல வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ருபல் ஹுசைன் அறிவித்துள்ளார். 

DIN


டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகப் பிரபல வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ருபல் ஹுசைன் அறிவித்துள்ளார். 

32 வயது ருபல் ஹுசைன், வங்கதேச அணிக்காக 2009 முதல் 27 டெஸ்டுகள், 104 ஒருநாள், 28 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2020 பிப்ரவரிக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் விளையாடவில்லை. கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு அவர் வங்கதேச அணியில் இடம்பெறவில்லை. 2021 டி20 உலகக் கோப்பை அணியில் ருபல் ஹுசைன் இடம்பெற்றிருந்தாலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ருபல் ஹுசைன் இன்று அறிவித்துள்ளார். இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் அளிக்கப்பட்டால் வங்கதேசம் பலமுள்ள அணியாக மாறும் என அவர் கூறியுள்ளார். 27 டெஸ்டுகளில் விளையாடியுள்ள  ருபல் ஹுசைன் 36 விக்கெட்டுகளும் 265 ரன்களும் எடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

SCROLL FOR NEXT