செய்திகள்

இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி

DIN

இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்தது. இந்தியா சார்பில் ஹர்திக் பாண்டியா 71 ரன்களும், கே.எல்.ராகுல் 55 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 46 ரன்களும் குவித்தனர்.

இதனையடுத்து, 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது ஆஸ்திரேலிய அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் ஃபின்ச் மற்றும் கேமரூன் க்ரீன் களமிறங்கினர். இந்த இணை தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. இருப்பினும், கேப்டன் ஆரோன் ஃபின்ச் 22 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனையடுத்து, கேமரூன் க்ரீன்  உடன் ஜோடி சேர்ந்தார் ஸ்டீவ் ஸ்மித். இவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரினை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய கேமரூன் க்ரீன் 30 பந்துகளில் 61 ரன்கள் குவித்து அசத்தினார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். ஸ்டீவ் ஸ்மித் 35 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

அதன் பின் களமிறங்கிய ஜோஷ் இன்கிலிஸ் 17 ரன்களிலும், டிம் டேவிட் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 145 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. அதனால் ஆட்டம் இந்தியாவின் பக்கம் திரும்புவது போன்று தெரிந்தாலும் மேத்யூ வேட் இந்திய அணியின் வெற்றிக் கனவை தனது அதிரடியான ஆட்டத்தால் தகர்த்தார். அவர் 21 பந்துகளில் 45 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அணியில் சாம்சன், சஹல், பந்த், துபே: கே.எல்.ராகுல் இல்லை; கில், ரிங்கு "ரிசர்வ்'

குடிநீா்த் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பூமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சரக்கு வாகனம் மோதியதில் ராணுவ வீரா் பலி

SCROLL FOR NEXT