பிரதமரிடமிருந்து ஊக்கம் கிடைப்பது முக்கியமானது: மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன்
ஒரு நாட்டின் பிரதமரிடமிருந்து ஊக்கம் கிடைப்பது முக்கியமானதென மகளிர் கிரிக்கெட் அணி ஹர்மன்ப்ரீத் கேப்டன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டின் பிரதமரிடமிருந்து ஊக்கம் கிடைப்பது முக்கியமானதென மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கருத்து தெரிவித்துள்ளார்.
காமன்வெல்த்தில் இம்முறை இந்திய அணி 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4-ம் இடம் பிடித்தது. பதக்கங்களைப் பெற்ற இந்திய வீரர்களை பிரதமர் மோடி பாராட்டியதுடன், அவர்களுக்கு பிரதமர் மாளிகையி ல் இன்று காலை 11 மணிக்கு விருந்து அளித்தார்.
மகளிர் கிரிக்கெட் இந்தாண்டு காமன்வெல்த்தில் முதன்முறையாக சேர்க்கப்பட்டது. இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டியில் தோல்வியுற்றது. வெள்ளி பதக்கம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதில் ஹர்மன்ப்ரீத் பிரதமர் அளித்த விருந்தில் கலந்துக் கொண்டார். அவர் பேசியதாவது:
Advertisement
Advertisement
ஒரு நாட்டின் பிரதமரிடமிருந்து ஊக்கம் கிடைப்பது முக்கியமானது. பிரதமர் மோடி எங்களிடம் பேசும்போது ஒட்டுமொத்த நாடும் எங்களுக்கு உறுதுணையாக இருப்பதாக இருந்தது. அனைவரும் எங்களது கடின உழைப்பை பாராட்டினர். இது மகளிர் கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரிய சாதனை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.