கோப்புப் படம் 
செய்திகள்

ஆடவர், மகளிர் ஜூனியர் ஹாக்கி அணிக்கு புதிய பயிற்சியாளர்!

ஹெர்மன் குரூயிஸ் 2006 முதல் 2010 வரை நெதர்லாந்து ஹாக்கி அணிக்கு பயிற்சியாளராக இருந்தவர். இவரின் தலைமையின்கீழ் ஐரோப்பா கோப்பையை நெதர்லாந்து அணி வென்றுள்ளது. 

DIN

இந்திய ஜூனியர் ஹாக்கி அணிக்கு ஹெர்மன் குரூயிஸ் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

அதன்படி இவர் இந்திய ஜூனியர் ஹாக்கி அணியின் மகளிர் மற்றும் ஆடவர் அணிக்கு பயிற்சி அளிக்கவுள்ளார். 

ஹெர்மன் குரூயிஸ் 2006 முதல் 2010 வரை நெதர்லாந்து ஹாக்கி அணிக்கு பயிற்சியாளராக இருந்தவர். இவரின் தலைமையின்கீழ் ஐரோப்பா கோப்பையை நெதர்லாந்து அணி வென்றுள்ளது. 

ஆண்கள் ஜூனியர் ஹாக்கி அணி டிசம்பர் 5 முதல் 16ஆம் தேதி வரை மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் பங்கேற்கவுள்ளது. 

இதேபோன்று மகளிர் ஜூனியர் ஹாக்கி அணி நவம்பர் 29 முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை சிலி நாட்டில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் பங்கேற்கவுள்ளது. 

இந்த இரு தொடர்களையொட்டி இரு அணிகளுக்கும் ஹெர்மன் குரூயிஸ் பயிற்சி அளிக்கவுள்ளார். அடுத்த 4 மாதங்களுக்கு இந்திய ஜூனியர் ஹாக்கி அணிக்கு நெருக்கடியான காலமாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூலித் தொழிலாளிக்கு ரூ. 1.60 கோடி வரிஏய்ப்பு செய்ததாக ஜிஎஸ்டி நோட்டீஸ்

கல்லறைத் திருநாள்: கிறிஸ்தவா்கள் முன்னோா்களுக்கு அஞ்சலி

ரூ.19.45 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசி ஆஸ்தானம்

பைக்குகள் திருடிய இருவா் கைது

SCROLL FOR NEXT