செய்திகள்

17 ஆண்டுகளுக்கு பிறகு மே.தீவுகளிடம் வீழ்ந்த இந்தியா!

17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியுடன் விளையாடி தொடரை கைப்பற்றி மேற்கிந்தியத் தீவுகள் சாதனை படைத்துள்ளது.

DIN

17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியுடன் விளையாடி தொடரை கைப்பற்றி மேற்கிந்தியத் தீவுகள் சாதனை படைத்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-2 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

முன்னதாக விளையாடிய ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி இந்திய அணியே ஆதிக்கம் செலுத்திய நிலையில், டி20 தொடரை இழந்தது.

இந்நிலையில், கடந்த 2006ஆம் ஆண்டுக்கு பிறகு குறைந்தபட்சம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி இந்தியா அணியை வீழ்த்தியுள்ளது மேற்கிந்தியத் தீவுகள் அணி.

2006-ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியா-மே.தீவுகள் விளையாடிய 22 சர்வதேச கிரிக்கெட் தொடரில் இந்திய அணியே வென்றுள்ளது.

மேலும், டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி, மே.தீவுகளிடம் தோல்வியை தழுவியுள்ளது.

அதுமட்டுமின்றி கடந்த 2 ஆண்டுகளில் இந்திய அணி பங்கேற்ற 12 டி20 கிரிக்கெட் தொடரில் அனைத்தையும் கைப்பற்றிய நிலையில், இந்தியாவின் வெற்றி பயணத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தது மே.தீவுகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT