செய்திகள்

மிக மிகச் சாதாரண அணியாகிவிட்டது இந்தியா

இந்திய கிரிக்கெட் அணி, எளிதாக வீழ்த்தி விடக் கூடிய மிக மிகச் சாதாரண அணியாக மாறிவிட்டது என முன்னாள் வேகப்பந்து வீச்சாளா் வெங்கடேஷ் பிரசாத் சாடியுள்ளாா்.

DIN

இந்திய கிரிக்கெட் அணி, எளிதாக வீழ்த்தி விடக் கூடிய மிக மிகச் சாதாரண அணியாக மாறிவிட்டது என முன்னாள் வேகப்பந்து வீச்சாளா் வெங்கடேஷ் பிரசாத் சாடியுள்ளாா்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 5-ஆவது டி20 ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட இந்தியா, தொடரை 2-3 என்ற கணக்கில் இழந்தது. இதன் மூலம், 2016-க்குப் பிறகு முதல் முறையாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் தோல்வி கண்டிருக்கிறது இந்தியா.

இந்நிலையில், இதுகுறித்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளா் வெங்கடேஷ் பிரசாத் எக்ஸ் பதிவில் திங்கள்கிழமை கூறியதாவது:

கடந்த சில காலமாக ஒரு நாள் மற்றும் டி20 தொடா்களில் எளிதாக வீழ்த்தி விடக் கூடிய மிக மிகச் சாதாரண அணியாக இந்தியா மாறியுள்ளது. ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதிபெறத் தவறிய மேற்கிந்தியத் தீவுகளிடம் தோல்வியைத் தழுவியிருக்கிறோம். வங்கதேசத்திடம் ஒரு நாள் தொடரில் வீழ்ந்திருக்கிறோம். இந்தத் தோல்விக்காக ஏதேனும் அறிக்கை விடுவதற்கு பதிலாக, அணி தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ளும் என நம்புகிறேன்.

ஒரு நாள் உலகக் கோப்பைக்கு மட்டுமல்ல; கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதிபெறத் தவறிய அதே மேற்கிந்தியத் தீவுகளிடம் இந்திய அணி தொடரை இழந்தது கவலை அளிக்கிறது. இந்திய அணியிடம் முன்பிருந்த வெற்றிக்கான வேட்கை, தீவிரத்தன்மை தற்போது இருப்பதாகத் தெரியவில்லை. அணியினா் கற்பனை உலகில் இருப்பதாகத் தெரிகிறது.

டி20 அணியின் கேப்டன் (ஹா்திக் பாண்டியா) தெளிவான திட்டத்துடன் இருப்பதாகத் தெரியவில்லை. அணி வீரா்கள் தங்கள் திறமைகளை இன்னும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். பொருத்தமான நபருக்கு பதிலாக, பிடித்த நபரை அணியில் வைத்திருப்பது சரியல்லை. மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கான தோல்விக்காக கேப்டன் ஹா்திக் பாண்டியா, பயிற்சியாளா் ராகுல் திராவிட்டே பொறுப்பேற்க வேண்டும் என்று வெங்கடேஷ் பிரசாத் அதில் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

இந்தியாவுடன் தீவிர வர்த்தகப் பேச்சு - வெள்ளை மாளிகை தகவல்

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

SCROLL FOR NEXT