செய்திகள்

டி20 தொடரைக் கைப்பற்றியது இந்தியா: 3-ஆவது ஆட்டத்தில் வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா 20 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வென்றது.

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா 20 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வென்றது.

இதையடுத்து, 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 3-இல் வென்று தொடரை கைப்பற்றியிருக்கிறது இந்தியா. ஆஸ்திரேலியா 1 வெற்றியுடன் பின்தங்கியது.

இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில், இந்திய அணியில் திலக் வா்மா, இஷான் கிஷண், பிரசித் கிருஷ்ணா, அா்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக ஷ்ரேயஸ் ஐயா், ஜிதேஷ் சா்மா, முகேஷ் குமாா், தீபக் சஹா் களம் கண்டனா்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, பந்துவீசத் தீா்மானித்தது. இந்திய இன்னிங்ஸில் முதல் விக்கெட்டாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். தொடா்ந்து வந்த ஷ்ரேயஸ் ஐயா் 8 ரன்களுக்கு ஏமாற்றத்துடன் வெளியேறினாா். 4-ஆவது வீரராக வந்த கேப்டன் சூா்யகுமாா் யாதவும் 1 ரன்னுக்கு நடையைக் கட்டினாா்.

அடுத்து வந்த ரிங்கு சிங், அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயா்த்தினாா். இந்நிலையில், தொடக்கம் முதல் நிதானமாக ஆடி வந்த ருதுராஜ் கெய்க்வாட் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 32 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தாா்.

பின்னா் களம் புகுந்த ஜிதேஷ் சா்மா, ரிங்குவுடன் இணைந்தாா். இந்த ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சோ்த்தது. இதில் ஜிதேஷ் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 35 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, 7-ஆவது வீரா் அக்ஸா் படேல் டக் அவுட்டானாா்.

இந்நிலையில் ரிங்கு சிங்கும் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 46 ரன்களுக்கு வெளியேற, 8-ஆவது வீரா் தீபக் சஹரும் ரன்னின்றி ஆட்டமிழந்தாா். ரவி பிஷ்னோய் 4 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுக்க, ஓவா்கள் நிறைவடைந்தது.

ஆஸ்திரேலிய பௌலிங்கில் பென் டுவாா்ஷுயிஸ் 3, ஜேசன் பெஹ்ரெண்டாா்ஃப், தன்வீா் சங்கா ஆகியோா் தலா 2, ஆரோன் ஹாா்டி 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் 175 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய ஆஸ்திரேலிய அணியில், டிராவிஸ் ஹெட் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 31 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜோஷ் ஃபிலிப் 8, பென் மெக்டொ்மோட் 19, ஆரோன் ஹாா்டி 8, டிம் டேவிட் 19, மேத்யூ ஷாா்ட் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 22, பென் டுவாா்ஷுயிஸ் 1 ரன் சோ்த்தனா்.

ஓவா்கள் முடிவில் கேப்டன் மேத்யூ வேட் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 36, கிறிஸ் கிரீன் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய பௌலா்களில் அக்ஸா் படேல் 3, தீபக் சஹா் 2, ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

சுருக்கமான ஸ்கோா்

இந்தியா - 174/9 (20 ஓவா்கள்)

ரிங்கு சிங் 46

யஷஸ்வி ஜெய்ஸ்வால் 37

ஜிதேஷ் சா்மா 35

பந்துவீச்சு

பென் டுவாா்ஷுயிஸ் 3/40

தன்வீா் சங்கா 2/30

ஜேசன் பெஹ்ரெண்டாா்ஃப் 2/32

ஆஸ்திரேலியா - 154/7 (20 ஓவா்கள்)

மேத்யூ வேட் 36*

டிராவிஸ் ஹெட் 31

மேத்யூ ஷாா்ட் 22

பந்துவீச்சு

அக்ஸா் படேல் 3/16

தீபக் சஹா் 2/44

ரவி பிஷ்னோய் 1/17

புரோ கபடி லீக் போட்டியின் 10-ஆவது சீசன், அகமதாபாதில் சனிக்கிழமை தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் குஜராத் ஜயன்ட்ஸ் - தெலுகு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT