செய்திகள்

மருத்துவரின்றி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி!

DIN

பாஸ்போர்ட் மற்றும் விசா பிரச்னைகளினால் பாகிஸ்தான் அணி மருத்துவரின்றி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்குமிடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற டிசம்பர் 14 ஆம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது. இந்த நிலையில், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) மற்றும் நுழைவு இசைவு (விசா) பிரச்னைகளினால் பாகிஸ்தான் அணி மருத்துவரின்றி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடருக்கு பாகிஸ்தான் அணியின் மருத்துவராக சோஹைல் சலீம் அறிவிக்கப்பட்டார். இருப்பினும், அவர் இன்னும் பாகிஸ்தான் அணியுடன் இணையவில்லை.

இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் சார்பில் தெரிவித்ததாவது: பாகிஸ்தான் அணியின் மருத்துவரான சலீம் அவர்களுக்கு நுழைவு இசைவு பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். நுழைவு இசைவு (விசா) கிடைத்தவுடன் அவர் உடனடியாக அணியுடன் இணைவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல,  19 வயதுக்குட்பட்டோருக்கான பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசியக் கோப்பைப் போட்டியில் அணி நிர்வாக மேலாளரின்றி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தா அணியின் உரிமையாளரைப் புகழ்ந்த வருண் சக்கரவர்த்தி; எதற்காக தெரியுமா?

குறைவான தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ்: என்ன காரணம்?

சிறையிலிருந்து வெளியே வந்தார் கேஜரிவால்!

சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த காலின் முன்ரோ; காரணம் என்ன?

சிஎஸ்கே பந்துவீச்சு; அணியில் மீண்டும் ரச்சின் ரவீந்திரா!

SCROLL FOR NEXT