முகப்பு
செய்திகள்

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; தொடரை சமன் செய்யுமா?

இந்தியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:26 PM
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (டிசம்பர் 14) ஜோஹன்ஸ்பெர்க்கில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் தென்னாப்பிரிக்க அணி இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் களம்  காண்கிறது. இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்தியா களமிறங்குகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி மழையினால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →