செய்திகள்

தோட்டத்தைப் பராமரிக்கும் பணியிலிருந்து ரூ.10 கோடிக்கு ஏலம் போன ஆஸ்திரேலிய வீரர்!

கடந்த ஆண்டுக்கு முன்புவரை தோட்டத்தைப் பராமரிக்கும் பணியினை செய்த ஆஸ்திரேலிய வீரர் இன்று குஜராத் டைட்டன்ஸ் அணியினால் ரூ.10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

DIN

கடந்த ஆண்டுக்கு முன்புவரை தோட்டத்தைப் பராமரிக்கும் பணியினை செய்த ஆஸ்திரேலிய வீரர் இன்று குஜராத் டைட்டன்ஸ் அணியினால் ரூ.10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் அண்மையில் துபையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் எடுத்தனர். ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் மாறினார். பாட் கம்மின்ஸும் அதிக விலைக்கு ஏலம் போனார். குஜராத் டைட்டன்ஸ் அணி ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளரான ஸ்பென்சர் ஜான்சனை ரூ.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 

இந்த நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியினால் ரூ.10  கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாகவும், தனது அம்மாவுக்கு மகிழ்ச்சியை அளித்தது பெருமையாக இருப்பதாகவும் ஸ்பென்சர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: 18 மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் ஒப்பந்தத்தில் நான் இடம்பெறவில்லை. பிக் பாஸ் லீக் போட்டிக்கான ஒப்பந்தத்திலும் இடம்பெறவில்லை. தோட்டத்தினைப் பராமரிக்கும் பணியினை நான் செய்து வந்தேன். கடந்த 18 மாதங்களில் பல விஷயங்களைக் கடந்து வந்துள்ளேன். அனைத்து சூழ்நிலைகளிலும் எனது அம்மாவும் குடும்பத்தினரும் எனக்கு ஆதரவாக இருந்தனர். நான் குஜராத் அணியால் மிகப் பெரிய தொகைக்கு ஏலத்தில்  எடுக்கப்பட்டது அவர்களுக்கும் மகிழ்ச்சியளித்துள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT