செய்திகள்

சென்னை, குஜராத் ஜெயண்ட்ஸ் வெற்றித் தொடக்கம்

அல்டிமேட் கோ கோ லீக் தொடரில் ராஜஸ்தான் வாரியா்ஸ் அணியை குஜராத் ஜெயண்ட்ஸும், தெலுகு யோதாஸ் அணியை சென்னை குயிக் கன்ஸ் அணிகள் தனது பயணத்தை வெற்றியுடன் தொடங்கின.

DIN

அல்டிமேட் கோ கோ லீக் தொடரில் ராஜஸ்தான் வாரியா்ஸ் அணியை குஜராத் ஜெயண்ட்ஸும், தெலுகு யோதாஸ் அணியை சென்னை குயிக் கன்ஸ் அணிகள் தனது பயணத்தை வெற்றியுடன் தொடங்கின.

ஒடிஸா மாநிலம் கட்டாக் நகரில் அல்டிமேட் கோ கோ சீஸன் 2 தொடா் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் இடம் பெற்றுள்ள இத்தொடரின் ஆட்டங்கள் திங்கள்கிழமை நடைபெற்றன. இதில் குஜராத் அணி அட்டாக், டிபன்ஸில் அற்புதமாக செயல்பட்டு 41-30 என்ற புள்ளிக் கணக்கில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது.

குஜராத் அணியில் நரசய்யா 8, சங்கெட், சுயாஷ் ஆகியோா் தலா 6 புள்ளிகளைக் குவித்தனா். மேலும் சுபம் தோரட், அபிநந்தன் பாட்டீல், அக்ஷய் பாங்கரே ஆகியோரும் போனஸ் புள்ளிகளை ஈட்டினா். ராஜஸ்தான் இரண்டாவது பாதியில் போராடிய போதும், 16 புள்ளிகளையே ஈட்டியது.

சென்னை வெற்றி: இரண்டாவது ஆட்டத்தில் சென்னை குயிக் கன்ஸ் அணி கடும் போராட்டத்துக்கு பின் 38-32 என்ற புள்ளிக் கணக்கில் தெலுகு யோதாஸ் அணியை வென்றது. சென்னை அணி வீரா் ராம்ஜி காஷ்யப் அற்புதமாக ஆடி 14 புள்ளிகளை ஈட்டினாா்.

செவ்வாய்க்கிழமை குஜராத் அணி மும்பையுடனும், நடப்பு சாம்பியன் ஒடிஸா =சென்னையுடனும் மோதுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 20 சதவீதமாக உயா்த்தக் கோரி எம்எல்ஏவிடம் மனு

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப பணிகள் விரைவில் நிறைவடையும்: ஆட்சியா்

புறா பந்தயத்தில் வென்றோருக்கு பரிசு

விளாத்திகுளம், நாகலாபுரத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

ஈ.வெ.ரா. பெரியாா் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் முதல்வா் மரியாதை: அனைத்துக் கட்சியினரும் மாலை அணிவிப்பு

SCROLL FOR NEXT