செய்திகள்

மின் தூக்கியில் மாட்டிக்கொண்ட மூன்றாம் நடுவர்; தாமதமான டெஸ்ட் போட்டி!

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நடுவர் லிஃப்டில் சிக்கிக் கொண்டதால் உணவு இடைவேளைக்குப் பிறகு போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்ட வேடிக்கை சம்பவம்.

DIN

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நடுவர் லிஃப்டில் சிக்கிக் கொண்டதால் உணவு இடைவேளைக்குப் பிறகு போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்ட வேடிக்கை சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் நடைபெற்று வருகிறது. போட்டியின் மூன்றாம் நாளான இன்று ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்துள்ளது. பாகிஸ்தான் அணியைக் காட்டிலும் ஆஸ்திரேலிய அணி 241 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. போட்டியின் மூன்றாம் நாளான இன்று மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மூன்றாம் நடுவர் இல்லாததால் போட்டியைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

மூன்றாம் நடுவரான ரிச்சர்டு இல்லிங்வொர்த் மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் மின் தூக்கிக்குள் (லிஃப்டில்) மாட்டிக் கொண்டார். இதனால் ஆட்டம் தொடங்குவதற்கு சற்றுத் தாமதமானது. இந்த சம்பவம் மைதானத்தை சிறிது வேடிக்கையாக மாற்றியது. அப்போது பேட்டிங்கில் இருந்த டேவிட் வார்னர் இந்த சம்பவத்தை நினைத்து சிரித்துக் கொண்டிருந்தார். 

இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தரப்பில் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றும் வெளியிடப்பட்டது.

அந்தப் பதிவில் தெரிவித்ததாவது: மூன்றாம் நடுவர் இல்லாததால் ஆட்டத்தில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. மூன்றாம் நடுவர் லிஃப்டினுள் மாட்டிக் கொண்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ ராம் ட்விஸ்டக்ஸ் ஐபிஓ: இறுதி நாளில் குவிந்த விண்ணப்பங்கள்!

அனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்

”வறுமையால் உறுப்பை விற்கும் குடும்பங்களின் மனநிலை..!” My Lord படம் குறித்து இயக்குநர் ராஜு முருகன்!

கார்த்தி வெளியிட்ட ஜி.வி. பிரகாஷின் மெண்டல் மனதில் பட முதல் பாடல்!

தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் அபிஷேக் சர்மா..! இஷான், பிரெவிஸ், ஃபர்ஹான் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT