செய்திகள்

அறிமுக வீரர்கள் பரத், சூர்யகுமாரை வாழ்த்திய குடும்ப உறுப்பினர்கள்! (படங்கள், விடியோ)

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. 

DIN

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. 

டெஸ்ட் தொடர், இன்று முதல் தொடங்கியுள்ளது. நாகபுரியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸி. அணி கேப்டன் கம்மின்ஸ், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், கே.எஸ். பரத் ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார்கள். இந்திய டெஸ்ட் அணிக்கான தொப்பியை சூர்யகுமார் யாதவுக்கு ரவி சாஸ்திரியும் பரத்துக்கு புஜாராவும் வழங்கினார்கள். அதேபோல ஆஸி. அணியில் மர்பி அறிமுகமாகியுள்ளார். 

இந்நிலையில் சூர்யகுமார், பரத் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள், டெஸ்ட் ஆட்டத்தை நேரில் பார்க்க வந்துள்ளார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமான இருவருக்கும் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள். பரத்தின் தாய் தன் மகனுக்கு முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் சென்னை, 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் மடிக்கணினிகளின் உற்பத்தியைத் தொடங்கிய சாம்சங்!

அன்புமணி பெயரை சொல்லாத ராமதாஸ்!

அழகூரில் பூத்தவள்... ஸ்வாதி சர்மா!

மான் விழி... ஸ்வேதா டோரத்தி!

SCROLL FOR NEXT