மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 114 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.
இத்துடன் குரூப் சுற்றை தோல்வியே இல்லாமல் 8 புள்ளிகளுடன் நிறைவு செய்துள்ளது இங்கிலாந்து.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் சோ்க்க, பாகிஸ்தான் 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 99 ரன்களே எட்டியது. இங்கிலாந்து பேட்டா் நேட் ஸ்கீவா் ஆட்டநாயகி ஆனாா்.
முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்தில் நேட் ஸ்கீவா் 12 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 81 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். பாகிஸ்தான் பௌலா்களில் பாத்திமா சனா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினாா். பின்னா் பாகிஸ்தான் இன்னிங்ஸில் துபா ஹசன் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 28 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருக்க, இங்கிலாந்து தரப்பில் கேத்தரின் ஸ்கீவா், சாா்லி டீன் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.