கோப்புப் படம் 
செய்திகள்

விராட் கோலியின் வாழ்க்கை மாறியதற்கு காரணம் யார் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது வாழ்க்கை மாற்றத்திற்கு காரணமானவரை பற்றி கூறியுள்ளார். 

DIN

2021இல்ஆர்சிபி அணி கேப்டன் பதவியிலிருந்து விலகிய விராட் கோலி, இந்திய டி20, டெஸ்ட் அணிகளின் கேப்டன் பதவியிலிருந்தும் கடந்தாண்டு விலகியுள்ளார். 

கோலியின் முடிவுக்குப் பிறகு இந்திய டி20 அணி கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். இச்சமயத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமித்து சர்ச்சையை ஏற்படுத்தியது பிசிசிஐ. இதனால் 2023 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியை வழிநடத்த வேண்டும் என்று ஆசைப்பட்ட கோலியின் கனவு தகர்ந்தது. 

இந்த சம்பவங்களின்போது விராட் கோலி மிகுந்த மனவருத்ததில் இருந்தார். அவரால் சரியாக கிரிக்கெட் விளையாட முடியவில்லை. பின்னர் இடைவெளிக்குப் பிறகு சிறப்பாக விளையாடி வருகிறார். இந்தாண்டு ஐபிஎல் மார்ச் 31ஆம் தேதி துவங்குகிறது. இதனையொட்டி நடந்த ஒரு நிகழ்ச்சியில் உங்களுடைய இன்ஸ்பிரேஷன் யார் எனற கேள்விக்கு விராட் கோலி பேசியது வைரலாகி வருகிறது. அவர் பேசியதாவது: 

இன்ஸ்பிரேஷன் (உத்வேகம்) என எடுத்துக்கொண்டால் அது வீட்டில் இருந்துதான் தொடங்கும். நிச்சயமாக அது என் மனைவி அனுஷ்காதான். கடந்த 2 ஆண்டுகளாக அவள் தாயாக எடுத்துக்கொள்ளும் பொறுப்புகள், தியாகம் பெரியது. அனுஷ்காவை பார்க்கும்போது எனக்கெல்லாம் ஏற்படும் பிரச்னைகள் ஒன்றுமில்லை என உணர ஆரம்பித்தேன்.

நம்மை நேசிக்கும் குடும்பம் அமைந்து விட்டாலே ஒரு மனிதனுக்கு தேவையான அடிப்படை கிடைத்து விட்டத்தாக அர்த்தம். அனுஷ்காவை சந்தித்த பிறகுதான் எனது பார்வைகள் மாறியது. வாழ்க்கை மாறியது. தந்தை இறந்த பிறகு பொறுப்புகள் கூடியது ஆனால் வாழ்க்கை மாறியது அனுஷ்காவ காதலித்த பிறகுதான். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி வரூடாந்திர பிரம்மோற்சவம்: பிப்.8-இல் தொடக்கம்

ஆத்தூா்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவருக்கு மத்திய அரசு விருது

கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்

அமைதிப் பேச்சுவார்த்தை: உக்ரைனுக்கு ரஷியா அழைப்பு!

தொழிற்சங்கங்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு..! -உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

SCROLL FOR NEXT