செய்திகள்

பந்துவீச்சைத் தேர்வு செய்த இந்தியா: அணியில் இரண்டு மாற்றங்கள்

இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 

DIN

இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி இன்று மும்பையில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதனையடுத்து, இலங்கை அணி அணி முதலில் பேட் செய்ய உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இன்றையப் போட்டியில் (ஜனவரி 5) வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்தியா களமிறங்குகிறது. இலங்கை அணி இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை இழக்காமல் இருக்கும் முனைப்போடு களம் காண்கிறது.

இந்திய அணியைப் பொறுத்தவரையில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சஞ்சு சாம்சன் மற்றும் ஹர்சல் படேல் இன்றையப் போட்டியில் விளையாடவில்லை. அவர்களுக்குப் பதிலாக ராகுல் திரிபாதி மற்றும் அர்ஷ்தீப் சிங் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

இலங்கை அணியைப் பொறுத்தவரை அந்த அணியில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படமால முதல் டி20 போட்டியில் உள்ள அணியே களமிறங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT