செய்திகள்

தலைமைப்பண்பை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா: முன்னாள் வீரர் பாராட்டு

DIN

ஷனகாவை ரன் அவுட் செய்யாத ரோஹித் சர்மாவைப் பாராட்டியுள்ளார் இந்திய முன்னாள் வீரர் முஹமது கைஃப்.

குவாஹாட்டியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 373 ரன்கள் குவித்தது. இலங்கை 50 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 306 ரன்களே எட்டியது. 113 ரன்கள் எடுத்த விராட் கோலி, ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.

இந்த ஆட்டத்தின் கடைசி ஓவரில் இலங்கை கேப்டன் ஷனகா 98 ரன்களில் இருந்தபோது, மறுமுனையில் ரன் அவுட் செய்தார் பந்துவீச்சாளர் ஷமி. மூன்றாம் நடுவர் இதுகுறித்த முடிவை அறிவிக்கும் முன்பு அப்பீலை திரும்பப் பெற்றுக்கொண்டார் ரோஹித் சர்மா. இதுபோல மறுமுனையில் ரன் அவுட் செய்த அஸ்வின், தீப்தி சர்மா ஆகியோர் சர்ச்சைகளுக்கு ஆளானதாலும் இந்திய அணியின் வெற்றி அப்போது உறுதியாகியிருந்ததாலும் இந்த முடிவை மேற்கொண்டார் ரோஹித் சர்மா.

ஷனகா 98 ரன்களில் இருந்தார். இதுபோல  அவரை அவுட் செய்ய விரும்பவில்லை எனத் தெரிவித்தார் ரோஹித் சர்மா. அவருடைய இந்த முடிவு குறித்து இந்திய முன்னாள் வீரர் முஹமது கைஃப் ட்விட்டரில் கூறியதாவது:

ரோஹித் சர்மா தனது அணியின் அப்பீலைத் திரும்பப் பெற்றுக்கொண்டது அவருடைய தலைமைப்பண்பை வெளிப்படுத்துகிறது. அவருக்கு வெற்றி தேவை. ஆனால் அதற்காக எந்தச் செயலிலும் ஈடுபட்டு அதைப் பெற மாட்டார். இதில் சரி, தவறு இல்லை. உங்கள் மனசாட்சி என்ன சொல்கிறதோ அதுதான் என்று கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

SCROLL FOR NEXT