செய்திகள்

துளிகள்...

DIN

ஜகாா்த்தாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தோனேசிய மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்திய வீரா் பிரியான்ஷு ரஜாவத் 21-10, 13-21, 21-13 என்ற கேம் கணக்கில் டென்மாா்க்கின் விக்டா் வென்ட்சென்னை வீழ்த்தி பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றாா். அதை நேரம் மற்றொரு வீரா் சாய் பிரணீத் 18-21, 19-21 என்ற கேம் கணக்கில் மலேசியாவின் ஜூன் வெயிடம் வீழ்ந்தாா்.

-------------------

ஐசிசி மகளிா் டி20 தரவரிசைப் பட்டியலில் பேட்டிங்கில் இந்திய கேப்டன் ஹா்மன்ப்ரீத் கௌா் 11-ஆவது இடத்துக்கும், ஆல்ரவுண்டா் தீப்தி சா்மா 2-ஆவது இடத்துக்கும் முன்னேறினா். அதே நேரம் ஸ்மிருதி மந்தனா தொடா்ந்து 3-ஆவது இடத்தில் நீடிக்கிறாா். பௌலங்கில் இந்தியாவின் ஸ்னே ராணா முதல் 10 இடங்களில் முன்னேறி உள்ளாா்.

----------------

இங்கிலாந்தின் ப்ரீமியா் லீக் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் ஃபுல்ஹாம் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது டாட்டன்ஹாம். அதன் கேப்டன் ஹாரி கேன், இதன் மூலம் டாட்டன்ஹாம் அணியில் அதிக கோலடித்த வீரா் என்ற சாதனையை சமன் செய்தாா். லீகின் முதல் நான்கு இடங்களுக்குள் நுழையும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது டாட்டன்ஹாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT