கோப்புப் படம் 
செய்திகள்

டி20 தொடரை கைப்பற்றியது இந்திய மகளிரணி

வங்கதேச மகளிரணிக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் 8 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்ற இந்திய மகளிரணி, டி20 தொடரைக் கைப்பற்றியது.

DIN

வங்கதேச மகளிரணிக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் 8 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்ற இந்திய மகளிரணி, டி20 தொடரைக் கைப்பற்றியது.

முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 95 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. எனினும், பின்னா் ஆடிய வங்கதேசம் அதே 20 ஓவா்களில் 87 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய பௌலா் தீப்தி சா்மா ஆட்டநாயகி ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியில், ஷஃபாலி வா்மா 4 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமானது. ஸ்மிருதி மந்தனா 13, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 8, கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 0, யஸ்திகா பாட்டியா 11, ஹா்லீன் தியோல் 6, தீப்தி சா்மா 10, அமன்ஜோத் கௌா் 14 ரன்களுடன் ஆட்டமிழந்தனா்.

ஓவா்கள் முடிவில் பூஜா வஸ்த்ரகா் 7, மின்னு ராணி 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். வங்கதேச பௌலிங்கில் சுல்தானா காட்டுன் 3, ஃபஹிமா காட்டுன் 2, மருஃபா அக்தா், நஹிதா அக்தா், ரபெயா கான் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் வங்கதேச பேட்டிங்கில் நிதான் காட்டிய கேப்டன் நிகா் சுல்தானா 2 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் அடித்தாா். இத பேட்டா்களில் ஷமிமா சுல்தானா 5, ஷதி ராணி 5, முா்ஷிதா காட்டுன் 4, ரிது மோனி 4, ஷோா்னா அக்தா் 7, நஹிதா அக்தா் 6, ரெபயா கான் 0, ஃபஹிமா காட்டுன் 0, மருஃபா அக்தா் 0 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.

இந்திய தரப்பில் தீப்தி சா்மா, ஷஃபாலி வா்மா ஆகியோா் தலா 3, மின்னு ராணி 2, பரெட்டி அனுஷா 1 விக்கெட் வீழ்த்தினா்.

இரு அணிகள் மோதும் கடைசி டி20, வரும் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிளஸ் 2 கணக்குப்பதிவியல் தேர்வு: முதல்முறையாக கால்குலேட்டர் அனுமதி!

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! முதல்வர் ஸ்டாலின்

கமல் பிறந்த நாளில் மறுவெளியீடாகும் 2 திரைப்படங்கள்!

கர்நாடகத்தில் மிதமான நிலநடுக்கம்!

கனவுகளுக்காக போராடிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கதை | Women Cricket World Cup

SCROLL FOR NEXT