மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி தனது 76வது சர்வதேச சதத்தினை அடித்து அசத்தினார். டெஸ்டில் இது 29வது சதம் என்பதும் ஐந்து வருடங்களுக்குப் பிறகு டெஸ்டில் சதமடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
போட்டியின்போது விக்கெட் கீப்பர் ஜோஷுவா டி சில்வாவும் விராட் கோலியும் பேசியது இணையத்தில் வைரலானது. விராட் கோலி சதமடிக்க வேண்டுமெனவும் அவரை சந்திக்க தனது தாயார் வந்திருப்பதாகவும் ஜோஷுவா டி சில்வா தெரிவித்தார்.
இதையும் படிக்க: 2ஆம் நாள்: 352 ரன்கள் பின்தங்கிய நிலையில் மே.இ.தீவுகள்!
போட்டி முடிந்தப் பிறகு ஜோஷுவா டி சில்வாவின் தாயார் விராட் கோலியை சந்தித்து நெகிழ்ச்சியடைந்த விடியோ இணையத்தில் வைரலானது. விராட் கோலி சந்தித்து ஆனந்த கண்ணீருடன் அவர் கூறியதாவது:
‘நான் உன்னைப் (ஜோஷுவா டி சில்வா) பார்க்க வரவில்லை. ஏனெனில் உன்னை நான் தினமும் பார்க்கிறேன். அதனால் விராட் கோலியை பார்க்க மட்டுமே வருகிறேனென’ எனது மகனிடம் கூறினேன். இப்போதுதான் விராட் கோலியை முதன்முறையாக சந்திக்கிறேன். அவர் அழகான அற்புதமான மனிதர். அவரும் எனக்கு மகன் போலதான். விராட் கோலிக்கு அழகான மனைவியும் இருக்கிறார்கள். விராட் கோலி திறமையான கிரிக்கெட்டர். விராட் கோலி போலவே எனது மகனும் சிறப்பாக விளையாடுவாரென நம்புகிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.