செய்திகள்

ஆஷஸ் கடைசி டெஸ்ட்: உணவு இடைவேளைக்கு முன்னதாக இங்கிலாந்து 130 ரன்கள் குவிப்பு!

DIN

ஆஷஸ் கடைசி டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் உணவு இடைவேளைக்கு முன்னதாக இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டை இழந்து 130 ரன்கள் எடுத்துள்ளது. 

இங்கிலாந்து-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான ஆஷஸ் கடைசி டெஸ்ட் லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நேற்று இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 295 ரன்களுக்கு தனது முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் கிரிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஸ்டுவர்ட் பிராட், மார்க் வுட் மற்றும் ஜோ ரூட் தலா 2 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 295 ரன்கள் எடுத்ததால் ஆஸ்திரேலியா இங்கிலாந்தைக் காட்டிலும் 12 ரன்கள் முன்னிலை பெற்றது.

இந்த நிலையில், இன்று (ஜூலை 29) மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஸாக் கிராலி மற்றும் பென் டக்கெட் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினர். இருப்பினும், பென் டக்கெட் 42 ரன்களுக்கு ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, ஸாக் கிராலியுடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடிய ஸாக் கிராலி அரைசதம் கடந்தார். உணவு இடைவேளைக்கு முன்னதாக இங்கிலாந்து ஒரு விக்கெட்டினை இழந்து 130 ரன்கள் எடுத்துள்ளது. ஸாக் கிராலி 71 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

உணவு இடைவேளைக்கு முன்னதாக இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 118 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

கடலோரக் காவல்படை வீரா்களிடையே டென்னிஸ் போட்டி

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT