செய்திகள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு 444 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா!

இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 270 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்தது.

DIN

இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 270 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்தது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனி ஓவலில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் மூன்றாம் நாளான நேற்று ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 123 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. மார்னஸ் லபுஷேன் 41 ரன்கள், கேமரூன் கிரீன் 7 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், இன்று  நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே லபுஷேன் 41 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின், கேமரூன் கிரினுடன் ஜோடி சேர்ந்தார் அலெக்ஸ் கேரி. இந்த இணை நிதானமாக விளையாடியது. கேமரூன் கிரீன் 25 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின், மிட்செல் ஸ்டார்க் களமிறங்கினார். சிறப்பாக விளையாடிய அலெக்ஸ் கேரி அரை சதம் அடித்தார். மறுமுனையில் அவருடன் பேட் செய்த மிட்செல் ஸ்டார்க் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும், அவர் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பாட் கம்மின்ஸ் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். 


 
8 விக்கெட்டுகளை இழந்து 270 ரன்கள் எடுத்திருக்க ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்தது. அலெக்ஸ் கேரி 66 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணியின் தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதன்மூலம், இந்திய அணியின் வெற்றிக்கு 444 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT