செய்திகள்

மழையால் ஆஷஸ் டெஸ்ட் போட்டி தாமதம்! 

DIN

ஆஷஸ் தொடர் இங்கிலாந்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் ப்ரத்யேகமாக நடைபெறும் டெஸ்ட் போட்டியாகும். கடந்த ஜூன் 16ஆம் தேதி முதல் எட்ஜ்பாஸ்டனில் முதல் ஆஷஸ் போட்டி நடைபெற்று வருகிறது. 

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 393/8 ரன்களும், ஆஸி. அணி 386/10 ரன்களும் எடுத்தது. தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 273 ரன்கள் எடுத்து மொத்த விக்கெட்டையும் இழந்துள்ளது. 

4வது நாளின் இறுதியில் ஆஸ்திரேலிய அணி 107/3 ரன்கள் எடுத்துள்ளது. வார்னர் 36 ரன்களுக்கு ஆட்டமிழக்க, டெஸ்டின் சிறந்த் பேட்ஸ்மேன்களான லபுஷேன், ஸ்மித் விக்கெட்டை பிராட் எடுத்து அசத்தினார். தற்போது களத்தில் உஸ்மான் கவாஜா 34 ரன்களுடனும் ஸ்காட் போலாண்ட் 13 ரன்களுடனும் 4வது நாளை முடித்தனர். 

இன்று 90 ஓவரில் ஆஸி. அணி வெற்றி பெற 174 ரன்கள் தேவை. இங்கிலாந்து வெற்றி பெற 7 விக்கெட்டுகள் தேவை. அதனால் இந்தப் போட்டி சுவாரசியமாக இருக்கும். இந்திய  நேரப்படி மாலை 3.30 மணிக்கு போட்டி தொடங்கவிருந்தது. 

எட்ஜ்பாஸ்டனில் மழை பெய்து வருவதால் இன்னும் ரண்டு மணி நேரம் விளையாட முடியாதென தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோசாப்பூ ரவிக்கைக்காரி! அடா ஷர்மா பிறந்தநாள் இன்று

காரைக்கால் அரசு மகளிா் கல்லூரி ஆண்டு விழா

கட்சி பிரமுகா் தாக்கப்பட்ட சம்பவம்: பாஜக மாவட்டத் தலைவா் கைது

இராபியம்மாள் கல்லூரி பட்டமளிப்பு விழா

திருவாரூரில் வாசிப்பு இயக்கம் தொடக்கம்

SCROLL FOR NEXT