செய்திகள்

கோலி - கம்பீர் கடும் மோதல்: 100% ஊதியம் அபராதம்!

பெங்களூரு - லக்னெள அணிகள் மோதிய போட்டியின்போது விராட் கோலி மற்றும் கெளதம் கம்பீர் மோதிக் கொண்ட நிலையில், இருவருக்கும் போட்டியின் ஊதியத்தில் இருந்து 100 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

DIN

பெங்களூரு - லக்னெள அணிகள் மோதிய போட்டியின்போது விராட் கோலி மற்றும் கெளதம் கம்பீர் மோதிக் கொண்ட நிலையில், இருவருக்கும் போட்டியின் ஊதியத்தில் இருந்து 100 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு லக்னெளவில் நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வென்றது.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 126 ரன்கள் எடுத்த நிலையில், லக்னெள அணி 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

போட்டியின் இரண்டாவது பாதியின் போது கோலி மற்றும் ஆப்கனை சேர்ந்த லக்னெள வீரர் நவீன்-உல்-ஹக் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, போட்டி முடிந்து வீரர்கள் கைகுலுக்கும் போது மீண்டும் கோலி - நவீன் இடையே மோதல் ஏற்பட, லக்னெள ஆலோசகர் கம்பீர் குறுக்கிட்டார். தொடர்ந்து, கம்பீரும் கோலியும் மோதிக் கொண்ட நிலையில் சக வீரர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர்.

இந்த மோதலை தொடர்ந்து, கோலி மற்றும் கம்பீரின் நேற்றைய போட்டியின் ஊதியத்திலிருந்து 100 சதவிகிதமும், நவீனுக்கு 50 சதவிகிதமும் அபராதமாக விதித்து ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின் கம்பியாளா் உதவியாளா் தகுதிகாண் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

4 கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு கடிதம்: ஆட்சியா்

வேன் மோதி இளைஞா் உயிரிழப்பு

கட்டுமானப் பணிகள் தரத்துடன் இருப்பதை உறுதி செய்யுங்கள்: உதவிப் பொறியாளா்களுக்கு அமைச்சா் வேலு அறிவுறுத்தல்

காயமடைந்து சிகிச்சைப் பெற்ற முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT