செய்திகள்

ரஷித் சுழலில் சிக்கிய ராஜஸ்தான்: 118 ரன்களுக்கு ஆட்டமிழந்தது!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 118 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

DIN

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 118 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யாசஸ்வி ஜெய்ஷ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் களமிறங்கினர். ஜோஸ் பட்லர் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, கேப்டன் சஞ்சு சாம்சன் களமிறங்கினார். சிறிது நேரத்திலேயே ஜெய்ஷ்வாலும் 14 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். சஞ்சு சாம்சன் சிறிது அதிரடியாக விளையாடினார். இருப்பினும், அவர் 30 ரன்களில் ஜோஸ்வா லிட்டில் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடங்கும். அதன் பின் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். படிக்கல் (12 ரன்கள்), அஸ்வின் (2 ரன்கள்), ரியான் பராக் (4 ரன்கள்), துருவ் ஜூரல் (9 ரன்கள்) ஆட்டமிழந்து வெளியேறினர். 

இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் 17.5 ஓவர்களில் தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. குஜராத் தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும், நூர் அகமது 2 விக்கெட்டுகளையும், முகமது ஷமி, ஹார்திக் பாண்டியா மற்றும் ஜோஸ்வா லிட்டில் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இதனையடுத்து, 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் டைட்டன்ஸ் விளையாடி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT