ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.
இதனையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட் செய்கிறது. ராஜஸ்தான் அணியில் ஜேசன் ஹோல்டருக்குப் பதிலாக ஆடம் ஸாம்பா சேர்க்கப்பட்டுள்ளார்.
புள்ளிப்பட்டியலில் குஜராத் அணி முதல் இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் நான்காவது இடத்திலும் உள்ளனர். புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் குஜராத் அணியும், இன்றையப் போட்டியில் நல்ல ரன் ரேட்டுடன் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் செல்லும் முனைப்பில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் களமிறங்குகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.