செய்திகள்

கே.எல்.ராகுலுக்கு பதிலாக கருண் நாயர்! 

காயம் காரணமாக லக்னௌ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக கருண் நாயர் சேர்க்கப்பட்டுள்ளார். 

DIN

காயம் காரணமாக லக்னௌ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக கருண் நாயர் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஐபிஎல் ஆட்டத்தின்போது வலது தொடை தசைப் பகுதியில் காயம் கண்டிருக்கும் இந்திய வீரரும், லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் கேப்டனுமான கே.எல்.ராகுல், நடப்பு ஐபிஎல் சீசன் மற்றும் எதிா்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் ஆகியவற்றிலிருந்து விலகுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

கடந்த 1-ஆம் தேதி ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு பவுண்டரியை தடுப்பதற்காக ஓடும்போது ராகுலின் தொடையில் காயம் ஏற்பட்டு கீழே சரிந்தாா். அதன் பிறகு ஆட்டத்திலிருந்து வெளியேறிய அவா், லக்னௌ இக்கட்டான நிலையில் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது கடைசி பேட்டராக களத்துக்கு வந்தாா். எனினும் அந்த ஆட்டத்தில் பெங்களூா் வென்றது.

உள்ளூர் போட்டிகளில் 6000 ரன்களுக்கும் அதிகமாக விளாசியுள்ள கருண் நாயர் ஐபிஎல் போட்டிகளில் 1496 ரன்கள் எடுத்துள்ளார். 

ஐபிஎல்-இல் 127 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடக்கூடியவர். டெஸ்டில் 300 ரன்கள் அடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT