செய்திகள்

ஐசிசி தரவரிசை: 48 மணி நேரத்தில் முதலிடத்தை இழந்த பாகிஸ்தான்! 

பாகிஸ்தான் அணி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் 3வது இடத்துக்கு கீழிறங்கியது.

DIN

நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடி வந்தது. 5 டி20 போட்டிகளில் 2-2 என சமநிலையில் முடிவுற்றது. ஒரு போட்டி பாதியிலேயே நடக்காமல் கைவிடப்பட்டது. இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.

4 போட்டிகளில் தொடர் வெற்றி பெற்றதன் மூலம் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் மே 6ஆம் நாள் 113 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி முதலிடத்துக்கு முன்னேறியது. 

நியூசிலாந்துக்கு எதிரான கடைசிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றதால் (4-1) மீண்டும் மூன்றாவது இடத்திற்கே வந்துவிட்டது. 

பாகிஸ்தான் அணியினால் 48 மணி நேரம் மட்டுமே ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்க முடிந்தது. 

தற்போதைய நிலவரப்படி ஒருநாள் அணிகளுக்கான ஐசிசி தரவரிசை: 

  1. ஆஸ்திரேலியா - 113 புள்ளிகள் 
  2. இந்தியா - 113 புள்ளிகள்  
  3. பாகிஸ்தான் - 112 புள்ளிகள் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பயனாளிகளுக்கு ஆணைகள்: அமைச்சா் வழங்கினாா்

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு தனியாக ஆவின் நிா்வாக தலைமையிடம்

குா்பிரீத்துக்கு தங்கம்; அமன்பிரீத்துக்கு வெள்ளி

சிவகாசி பகுதியில் நாளை மின்தடை

சிவகங்கை அருகே 220 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டுகள்

SCROLL FOR NEXT