செய்திகள்

வாழ்வா, சாவா? ஆர்சிபி பேட்டிங்: அணியில் 2 மாற்றங்கள்! 

ராஜஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

DIN

ராஜஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருக்கும் பெங்களூரு அணி 12 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணியுடன் மோதுகிறது. இந்தப் போட்டியில் ஆர்சிபி வென்றாக வேண்டும். இல்லையென்றால் ப்ளே-ஆஃப்க்கு தகுதி பெற முடியாது. 

ராஜஸ்தான் அணி வென்றால் புள்ளிப் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறும். தோல்வியுற்றால் இந்த அணிக்கும் ப்ளே-ஆஃப்க்கு தகுதி பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆர்சிபி அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஹேசல்வுட்க்கு பதிலாக பர்னேலும், ஹசரங்காவிற்கு பதிலாக பிரேஸ்வெல் களமிறங்க உள்ளனர். 

ராஜஸ்தான் அணியில் ஒரு மாற்றம்: டிரெண்ட் போல்ட்க்கு பதிலாக ஆடம் ஜாம்பா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT