ஜோஃப்ரா ஆர்ச்சர் 
செய்திகள்

ஆஷஸ் தொடரிலிருந்து ஆர்ச்சர் விலகல்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் இருந்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகியுள்ளார்.

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் இருந்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகியுள்ளார்.

முழங்கை காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த ஆர்ச்சர் சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகி இங்கிலாந்து திரும்பினார்.

அங்கு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வரும் ஆர்ச்சர், முழங்கை காயம் இன்னும் குணமடையாததால் ஆஷிஸ் தொடரில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஆஷஸ் தொடருக்கு முன்னதாக ஜூன் 1-ஆம் தேதி அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடும் அணியை அறிவிக்கும் நிகழ்வில், இதனை தெரிவித்துள்ளனர்.

ஜூன் 16-ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளை கொண்ட ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து விளையாடவுள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக லார்ட்ஸ் மைதானத்தில் அயர்லாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து விளையாடுகிறது.

இந்த போட்டிக்கு இங்கிலாந்து அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காயம் காரணமாக ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய பேர்ஸ்டோ இடம்பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்சியா் அலுவலகத்தில் கல்விக் கடன் முகாம்: 22 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி கடன் உதவி

மயிலக்கா

உத்தமபாளையம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

காரைக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

தூய செங்கோல் மாதா சப்பர பவனித் திருவிழா

SCROLL FOR NEXT